அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புதுமடம் செய்தி மற்றும் தங்களின் ஆக்கங்களை இவ்விணையதளத்தில் வெளியிட இன்றே கீழ் காணும் மின்னஞசல் முகவரிக்கு தங்களின் மின்னஞசலை அனுப்பி வைக்கவும்.





mail@pdmnews.com
__________________
இது வரை நமது தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை

முகநுால்

டுவிட்டர்

Blogger இயக்குவது.
வெள்ளி, அக்டோபர் 28, 2011
சவூதி அரபிய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், வெளிநாட்டினர் தங்கள் சம்பளத்தை 'அப்படியே' தாயகம் அனுப்புவதில் கட்டுப்பாடு ஏற்படுத்த சவூதி தொழிலாளர் நல அமைச்சகம் தீர்மானித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி வாங்கும் சம்பளத்தில் 'குறிப்பிட்ட சதவிகிதம்' மட்டுமே தாயகம் அனுப்ப அனுமதிக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆதில் ஃ பக்கீஹ் தெரிவித்துள்ளதாக அல் அரேபியா செய்தி வெளியிட்டுள்ளது. (கடாஃபி கால லிபியாவில் சுமார் 35 -40 சதவிகிதமளவு சம்பளத்தை லிபியாவிலேயே செலவிடும்படி, வெளிநாட்டவர்கள் பணிக்கப்பட்டிருந்தனர் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது)

"பத்துக்கு ஒன்பது வீதத்தில் வெளிநாட்டவர்களே தொழிலாளர்களாக உள்ள இந்த நாட்டில், பெருமளவு பணம் வெளியே செல்வதால், உள்நாட்டுப் பொருளாதாரம் பாதிப்படைகிறது" என்று அமைச்சர் கூறியிருக்கிறார்.

கடந்த 2010 ஆம் ஆண்டில்,அயல்நாடுகளுக்கு அந்தந்த நாட்டுத் தொழிலாளர்கள் அனுப்பிய தொகை சுமார் 98.2 பில்லியன் ரியால்களாகும். 2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது இரண்டு மடங்காகும் என்று சவூதி அரேபிய பண நிறுவனத் (SAMA) தகவல் ஒன்று கூறுகிறது.

அதிக அளவு பணம் வெளியாகும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் சவூதி அரேபியா உள்ளது என்று உலகவங்கியின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும், உலகளவில், அந்நிய செலாவணி அனுப்பப்பட்டதில் ஒட்டு மொத்தமாக, கடந்த ஆண்டு 2.44 சத வளர்ச்சி இருந்தது என்றால், வளைகுடா நாடுகளில் இவ்வளர்ச்சி விகிதம் 6.1 சதமாக உள்ளது.

அதிக அளவு அந்நியச் செலாவணி பெறும் நாடுகளில் $ 55 பில்லியன் டாலர்களுடன் இந்தியா முதல்நிலை வகிக்கிறது. இவற்றுள் 30 சதவிகிதம் வளைகுடா நாடுகளிலிருந்து அனுப்பப்படுவதாகும்.

நன்றி : இந்நேரம்
அரபுநாட்டு வேலை என்னும் மாயைக்குப் பதிமூன்று வருடங்களைப் பலி கொடுத்த அப்பாவியின் (உண்மைக்) கதை.

தமிழர் தான் அவர். சுப்ரமணியம் என்று பெயர். 38 வயதில் வாயைக் கட்டி வயித்தைக் கட்டி விசாவுக்குப் பணமும் கட்டினார். அது ஃப்ரீ விசா எனப்படும் திறந்த வேலைவாய்ப்பை வழங்கும் விசா. அரபுநாட்டில் இறங்கியதும், அரசாங்க சம்பிரதாயங்களை மட்டும் விசா கொடுத்தவர் முடித்துக் கொடுப்பார். எங்கும், எவ்வித வேலையும் தேடிக்கொள்ளலாம் என்பது இதன் வசதி. ஆனால், மாதந்தோறும் ஒரு தொகை கப்பம் கட்டியாக வேண்டும் - விசா கொடுத்த அரபியருக்கு.

முதலிரு வருடங்கள் சுப்ரமணியனுக்கு எவ்விதப் பிரச்னையும் இருக்கவில்லை. கஃபீல் எனப்படும் அந்தப் பொறுப்பாளர் எல்லா சம்பிரதாயங்களையும் ஒழுங்குறவே செய்திருந்தார். அதன் பிறகு தான் சிரமங்கள் அவரைச் சூழத் தொடங்கின. அந்த இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அந்தப் பொறுப்பாளரை காணவில்லை. எங்கு போனாரோ தெரியவில்லை. தேடி அடையவும், விவரம் பெறவும் இயலாமல் போனது. சுப்ரமணியம் படித்தவரல்லர். மேலும், சவூதி சட்டதிட்டங்கள் பற்றியும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தை வயிறு உணர்த்த, அந்த உந்துதலில் கிடைத்த சிறு சிறு வேலைகளில் ஈட்டிய சிறுதொகை வேளைதோறும் வயிற்றுக்கே போதும் போதாது என்று போய்க்கொண்டிருந்த நிலையில், மெல்ல மெல்ல குடும்பத் தொடர்பும் அறுந்துப் போனது.

முடியாத நிலையில் சுப்ரமணியம் கிடந்தபோது, சில வருடங்களாகத் தொடர்பு இல்லாததால் இவர் கதை முடிந்திருக்கும்; இறந்துவிட்டார் என்றே முடிவு கட்டிவிட்டார்கள் குடும்பத்தார். மனைவி, இரு பிள்ளைகள் என்ற சிறு குடும்பம். கைக்குழந்தையாய் விட்டுவந்த மகளுக்கு இப்போது 13 வயது. வறுமை துரத்தியதால் மகனும் பள்ளிப்படிப்பை கைவிட்டு பண்ணைக் கூலியாளாகப் போய் விட்டான்.

முடக்கு வாதம், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றால் நலிவுற்று நோயுற்ற சுப்ரமணியம் பற்றி தபூக் இந்தியன் கம்யூனிட்டி என்னும் நற்பணி அமைப்பினர்க்குத் தெரிய வந்தது. அதன் பிரதான உறுப்பினரான அலீ மாஸ்டர் உடனடியாக ஜெத்தாவிலுள்ள இந்தியத் துணை தூதரகத்தின் கதவுகளைத் தட்டினார். துணை தூதரக மூத்த அதிகாரி எஸ்.டி. மூர்த்தி உடனடியாகச் செயலில் இறங்கினார். ஜெத்தா தமிழ்ச்சங்கத்தின் சிராஜ் போன்ற நல்லுள்ளங்கள் நிதிஉதவி திரட்டித் தர, மருத்துவமனையில் உடல் தேறிவந்தார் சுப்ரமணியம்.

உடனடியாக அவரை ஊருக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பை ஏற்று, சம்பந்தப்பட்ட சவூதி குடிபுகல்துறை, தடுப்புக்காவல் துறை அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பைப் பெற்று செயற்பட்ட தூதரக மூத்த அதிகாரி மூர்த்தி பாராட்டுக்குரியவர்.

ஒருவழியாக சுப்ரமணியம் ஊருக்கு அனுப்பப்பட்டார்.

ஆனால் இப்படி எத்தனை எத்தனையோ சுப்ரமணியங்கள் வெளிநாட்டு மோகம் கொண்டு, வந்து கொண்டும் (கஷ்டப்பட்டுப்) போய்க்கொண்டும் தான் இருக்கிறார்கள்.

கடன் கடக்கவே கடல் கடக்கும் சுப்ரமணியங்களுக்கிடையே வாழ்வில் நல்லதொரு இடம் கிடைப்பின் மட்டுமே கடல் கடக்கும் கொள்கையுடைய மணியானவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். என்ன வேறுபாடு என்றால் கல்வியறிவு.

ஆம். கற்றாரே கண்ணுடையார். 

 நன்றி : இந்நேரம்
புதன், அக்டோபர் 26, 2011
சென்னை: கடந்த சில தேர்தல்களாக 2 சதவீதம் அல்லது அதற்கு மேல் வாங்கி வந்த பாஜக, உள்ளாட்சித் தேர்தலில் அதிலிருந்து சரிந்து விட்டது.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கணிசமான வெற்றிகளைப் பெற்றிருந்தது. 2 நகராட்சித் தலைவர் பதவி, 4 மாநகராட்சிக் கவுன்சிலர்கள், 37 நகராட்சி கவுன்சிலர்கள், 13 பேரூராட்சித் தலைவர்கள், 181 கவுன்சிலர்கள், 2 வார்டு உறுப்பினர்கள் என அனைத்திலும் பாஜக சொல்லிக் கொள்ளும்படியாக பிரிநிதிகளைப் பெற்றிருந்தது.

அதிமுக, தி்முக என தலா ஒருமுறை கூட்டணி அமைத்து தமிழகத்திலும் பாஜக பிரபலமானது. ஆனால் அதன் பின்னர் இரு திராவிடக் கட்சிகளும் பாஜகவை தூரத்தில் வைத்து விட்டன. இதனால் தொடர்ந்து அது தனியாகவே போட்டியிட்டு வருகிறது.

தனியாக போட்டியிட்டாலும் தலா 2 சதவீத வாக்குகளை ஒவ்வொரு தேர்தலிலும் அது பெறத் தவறியதில்லை. கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் தனக்குள்ள செல்வாக்கை அது தொடர்ந்து நிரூபித்து வருகிறது.

கடந்த 2006 சட்டசபைத் தேர்தலில் 2.02 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக, 2009 லோக்பா தேர்தலில் 2.34 சதவீத வாக்குகளைப் பெற்றது.

இந்த நிலையில் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் அதன் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. 1.35 சதவீத வாக்குகளையே அது பெற்றுள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலின்போது பெற்ற வாக்குகளை இந்த முறையும் வாங்கியிருந்தால் இன்னும் கூடுதலான உள்ளாட்சிப் பதவியிடங்களைஅது கைப்பற்ற முடிந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவைப் பொறுத்தவரை எது வந்தாலும் அதற்கு லாபம்தான். காரணம், யாரும்தான் அவர்களை கூட்டணிக்குக் கூப்பிடப் போவதில்லையே...!
திங்கள், அக்டோபர் 24, 2011
ள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலாகவே இருந்தாலும், இந்தத் தேர்தல் முடிவுகள் பல அரசியல் விமர்சகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். காரணம், தங்கள் கட்சியின் உண்மையான பலம் என்ன என்று ஏறக்குறைய அனைத்துக் கட்சிகளும் தனியே நின்று சோதித்துப் பார்க்கும் களமாக இந்தத் தேர்தல்  அமைந்தது.


ஒவ்வொரு கட்சிகளும் மக்களிடம் பெற்றுள்ள செல்வாக்கு என்ன என்று நாமும் கொஞ்சம் அலசுவோம், வாருங்கள்.


அதிமுக:

ஆளும்கட்சி என்பதால், மக்களின் ஆதரவை அதிமுக அள்ளியுள்ளது. பொதுவாக மாநிலத்தில் ஆட்சியில் உள்ள கட்சியும் உள்ளாட்சி அமைப்பில் ஜெயிக்கும் கட்சியும் ஒன்றாக இருந்தால், நம் தேவைகள் எளிதிக்ல் நிறைவேறும் என்பதே மகக்ளின் எதிர்பார்ப்பு. அதையே இந்தத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.


ஆனாலும், மின்வெட்டுப் பிரச்சினை இந்த ஆட்சியில் இன்னும் தீர்க்கப்படாத நிலையிலும் அதிகளவு இடங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். அதிக ஓட்டு வங்கி கொண்ட கட்சி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது அதிமுக.

திமுக:

சென்ற உள்ளாட்சித் தேர்தலோடு ஒப்பிடும்போது, மோசமான தோல்வி தான். சட்டமன்றத்தேர்தலில் வாங்கிய அடி இன்னும் தொடர்கிறது.


இந்தத் தேர்தலில் திமுகவிற்குக் கிடைத்துள்ள நலல் செய்தி என்னவென்றால், இன்னும் மக்கள் இரண்டாவது பெரிய கட்சியாக,திமுகவை அங்கீகரித்திருப்பது தான். குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாக விஜயகாந்த் எதிர்க்கட்சித்தலைவர் ஆகிவிட்டாலும், மக்கள் மனதில் திமுகவே உண்மையான எதிர்க்கட்சியாக இருப்பது உறுதியாகியுள்ளது. நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் திமுக இரண்டாவது பெரிய கட்சியாக தன்னை தக்கவைத்துக்கொண்டுள்ளது.


சிபிஐ(மார்க்ஸிஸ்ட்)/சிபிஐ/பாஜக :


மூன்றுமே தலா இரண்டு நகராட்சிகளைக் கைப்பற்றியுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகள் கிராமப்புறங்களிலும் தனக்கிருக்கும் வாக்குவங்கியை நிலைநிறுத்தியுள்ளன.


பாஜக பெற்றுள்ள வெற்றியும் அதிசயம் தான். ‘வருங்கால முதல்வர்களின்’ கட்சியை விட அதிக இடங்களைப் பிடித்துள்ளது பாஜக.


காங்கிரஸ் :

‘டவுசர்’ கழட்டப்பட்ட கட்சிகளுள் பிரதான கட்சியாக காங்கிரஸ் உள்ளது. மாநகரங்களிலும், நகரங்களிலும் ஒரு சீட் கூட பிடிக்க முடியாத அவலநிலைமை காங்கிரஸ்க்கு. இதுவரை அடுத்தவர் தோளிலேயே ஏறிச் சவாரி செய்து நாட்டாமைத்தனம் செய்துவந்த காங்கிரஸின் உண்மையான பலம், இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.


பஞ்சாயத்துகளில் 24 இடங்களைப் பிடித்ததன்மூலம், இன்னும் கிராமப்பகுதிகளில் கொஞ்சம் உயிர் உள்ளது என்பதைக் காட்டியுள்ளது. இனியாவது தமிழர் விரோதப் போக்கையும், ‘பிஸ்தா’ பில்டப்பையும் கைவிட்டால் காங்கிரஸ்க்கு நல்லது.



மதிமுக :

தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை’ இவரு அதுக்குச் சரிப்பட்டு வரமாட்டார்’ என்று நினைக்கப்பட்ட வைகோவுக்கும், ‘செத்த பாம்பு’ என்று சென்ற தேர்தலில் புதைக்கப்பட்ட மதிமுகவிற்கும், இந்தத் தேர்தல் மறுபிறவியைக் கொடுத்துள்ளது.


தனியே, எவ்விதக்கூட்டணியும் இல்லாமல் மதிமுக அடைந்திருக்கும் வெற்றி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நகராட்சிகளில் ஒன்றையும், பஞ்சாயத்துகளில் 49-ஐயும் கைப்பர்றி, தனது வாக்குவங்கி இன்னும் சிதையாமல் இருப்பதை அனைவருக்கும் எடுத்துக்காட்டியுள்ளது மதிமுக.


’காமெடி பீஸ் என்று நாம் நினைக்கும் வைகோவிடம் அப்படி என்ன தான் இருக்கிறது?’ என்று சக கட்சியினருக்கும் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அன்று தன் தம்பிக்கு ஓட்டுப் போடாமல், ராஜீவ் கொலைவழக்கு- தூக்குதண்டனைக் கைதிகளைக் காப்பாற்ற டெல்லிக்கு ஓடினாரே வைகோ, அதில் மறைந்துள்ளது அதற்கான பதில்.


தேமுதிக :

வருங்கால முதல்வரும் நமது எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் நிலைமை தான் பரிதாபகரமாக ஆகிவிட்டது. திமுக மேல் இருந்த வெறுப்பும், அதிமுக ஓட்டு வங்கியும் கைகொடுத்ததால், சென்ற சட்டமன்றத் தேர்தலில் 29 சீட்களைப் பெற்று இரண்டாவது பெரிய கட்சி என்ற ‘தோற்றத்தைப்’ பெற்ற விஜயகாந்தின் உண்மையான மதிப்பு, இப்போது தெரியவந்துள்ளது.


நகராட்சிகளில் இரண்டைப் பெற்றுள்ளதன் மூலம் நகரங்களில் தன்னை ஓரளவு நிலைநிறுத்திக் கொண்டாலும், பஞ்சாயத்துகளைப் பொறுத்தவரை வெறும் இரண்டே இடங்களைப் பெற்றுள்ளது தேமுதிக.


எனவே நாம் தொடர்ந்து சொல்லி வருவது போல், தேமுதிக என்பது பாமகவிற்குத் தான் மாற்று; அதிமுக-திமுகவிற்கு மார்று அல்ல என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல்வரை அதிமுக ஆட்சி பற்றி விமர்சிக்காமல், வாய்மூடி இருந்துவிட்டு, கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளியவுடன் ‘நானே மாற்று’ என்று பேசியதை மக்கள் ரசிக்கவில்லை. 


இந்த முடிவுகளால் விஜயகாந்த்தின் தொண்டர்கள், தனியாய் நின்றால் என்ன கதி ஆவோம் என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள். எனவே அடுத்த தேர்தல்களில் கண்டிப்பாக கூட்டணி வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். எனவே அவர் அதிமுகவிடமோ, திமுகவிடமோ சரணடைய நேரலாம். அதன்மூலம் இன்னொரு பாமக-வாக தேமுதிக மாறும்.


பாமக:

2016ல் எப்படியும் ஆட்சியைப் பிடிப்பது என்ற லட்சியத்துடன் இருந்த பாமக தான் இந்தத் தேர்தலில் படுகேவலமான தோல்வியைச் சந்தித்திருப்பது.


சென்ற தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்தித்தபோதும், திமுக சகவாசம் தான் அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. பொதுவாக உள்ளாட்சித் தேர்தலில் சாதியின் தாக்கம் அதிகம் இருக்கும். அப்படி இருந்தும், பாமக அடைந்துள்ள படுதோல்வி வன்னியர் சமுதாயம் பாமகவை தூக்கி எறிந்துவிட்டதையே காட்டுகிறது. மாநகராட்சி, நகராட்சிகளில் ஒரு இடம்கூட ஜெயிக்காதது பரவாயில்லை. பஞ்சாயத்துகளில் இரண்டே இடங்களைப் பிடித்ததன் மூலம், பாமகவின் உண்மையான வாக்குவங்கி என்ன என்று தெளிவாகத் தெரிந்துள்ளது.


ஏற்கனவே இனி திமுக-அதிமுக உடன் கூட்டணி கிடையாது என்று சொற்பேச்சு தவறாத தலைவரான ராமதாஸ் அறிவித்துள்ளார்.கூடவே பாமக தலைவர்களுக்கு ஏதாவது ‘சுயதொழில் வேலைவாய்ப்புத் திட்டத்தையும் அவர் அறிவிப்பது நலம்.

நன்றி 
ள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 760 பதவிகளுக்கு,  தேர்தல் நடத்தப்பட்டது.
ஞாயிறு, அக்டோபர் 23, 2011
நமது ராமநாதபுரம் மாவட்டத்தில் 2011 யில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்கள் பட்டியல்.
சனி, அக்டோபர் 22, 2011



மண்டபம் ஒன்றிய வார்ட் உறுபினர்
ஊராட்சி மன்ற தலைவர்

update will soon
வெள்ளி, அக்டோபர் 21, 2011

அன்பார்ந்த புதுமடம் சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

வளைகுடாவில் வாழும் நாம் ஓர் அளவு நடுநிலையான தமிழ் செய்திகளை அறிந்து கொள்ள இணையத்தில் தொலைக்காட்சி.
வெள்ளி, அக்டோபர் 14, 2011
இன்னும் 10 மாதங்கள் கடந்தால், எல்லாக் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு உள்ளும் பல்லாயிரம் கோடி பணம் பாயப்போகிறது. ஆனால், அந்தக் கிராமங்கள் அப்படியேதான் இருக்கப்போகின்றன. எத்தனையோ திட்டங்கள், திறப்பு விழாக்கள் நடக்கின்றன. இருந்தும், கிராமங்கள் இன்னும் செழிக்காதது ஏன்?
'இதை எப்படி எழுதுவது?’ என்று பல முறை எழுதி, அடித்து, கிழித்து, கோவப்பட்டு, சலித்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். அசிங்கங்களை அசிங்கமாகவே எழுதுவது என்று!