அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புதுமடம் செய்தி மற்றும் தங்களின் ஆக்கங்களை இவ்விணையதளத்தில் வெளியிட இன்றே கீழ் காணும் மின்னஞசல் முகவரிக்கு தங்களின் மின்னஞசலை அனுப்பி வைக்கவும்.





mail@pdmnews.com
__________________
இது வரை நமது தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை

முகநுால்

டுவிட்டர்

Blogger இயக்குவது.
புதன், ஜனவரி 23, 2013

சமீபத்தில் ஜனவரி 6 அன்று மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள துலே என்னுமிடத்தில் நடந்த கலவரம் குறித்து ஹிந்து பத்திரிக்கையில் வெளியான செய்தி: இந்த கலவரம் குறித்து உண்மை கண்டறியும் குழு விசாரித்து தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இதில் முஸ்லிம்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தி ஹிந்து செய்தி
கருத்தாக்கம்
திட்டமிட்டு குறிவைத்து தாக்கப்பட்ட துலே முஸ்லீம்கள் – உண்மையை  கண்டறியும் குழுவின் குற்றச்சாட்டு அறிக்கை 
ஜனவரி 6 அன்று மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள  துலே என்னுமிடத்தில் நடந்த ஒரு கலவரத்தில், முஸ்லீம்களை காவல் துறையினர்  குறி வைத்து தாக்கியதன் உண்மையை கண்டறிய சில சமூக ஆர்வலர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்றனர் . இந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட அனைவரும் முஸ்லீம்கள்.
ஒரு உணவுக் கடை உரிமையாளருக்கும், ரிக்ஷாகாரருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறில் ஆரம்பித்து ஹிந்து முஸ்லீம் கோஷ்டி மோதலாக வெடித்து கை கலப்பு முதல் கல் வீச்சு வரை சென்றுள்ளது. காவல் துறையினர் வேடிக்கை பார்க்க , சுமார் 35 முஸ்லிம்களின் குடும்பங்களின் வீடுகளில் இருந்த பொருட்களை சூறைஆடிவிட்டு அவ்வீடுகளுக்கு தீ மூட்டி கறித்துள்ளனர்  இந்த கொடும்பாவிகள் .
இது அனைத்தும் நடந்து அறங்கேறியது  மனிதநேயமற்ற  காவல்துறையின் கண்களுக்கு முன்னால் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. காப்பாற்றவில்லை என்றாலும் கூட பரவாயில்லை , ஆனால் இந்த காவல் துறையினரும்  இந்து கலவரகாரகளுடன் சேர்ந்து தங்கள் பங்காக முஸ்லிம்களை கண்மூடி தனமாக சுட்டு தள்ளி உள்ளனர் என்று  சமூக ஆர்வலர்களின் உண்மையை கண்டறியும் குழுவில் இடம்பெற்றிருந்த  ஷப்னம் ஹாஷிமி , பேராசிரியர் ராம் புனியானி , மற்றும் அபூர்வானந் நடந்த சம்பவத்தை ஆய்வு செய்து  டில்லியில் தகவல் அறிக்கையை  வெளியிட்டுள்ளனர்  .
அந்த  தகவல் அறிக்கையில் மேலும்  கூறியிருப்பதாவது, “காவல் துறையினர், கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு எந்த வித அறிவிப்போ  ,தடியடியோ அல்லது கண்ணீர் புகை குண்டு வீசுவதோ போன்ற எந்த ஒரு முயற்சியையும் செய்யாமல், துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளது. அனைத்து தோட்டாக்களும் முட்டிக்கு மேல், வயிறு, மார்பு, கழுத்து, முதுகு மற்றும் முகம் போன்ற பகுதிகளில் சுடப்பட்டுள்ளன” ,அதே சமயம் இந்து  மக்கள் தரப்பில் வெறும் நான்கு வீடுகள் மட்டுமே சேதபட்டன.
அரசு தரப்பில், “காவல் துறையினர் , தங்களது தற்காப்புகாகவே துப்பாக்கி சூடு நடத்தினார்கள் என்றும், இந்த மோதலின் போது கொடூர இராசயனங்களால் காவல் துறையினரை  தாக்கியதாகவும், இதில் 159 காவல் துறையினர்  பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்” என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், உண்மையில் “18 காவல்துறையினர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதித்திருந்ததும், மேலும் இவர்களுக்கு பெரிய விதமான எந்த தாக்குதலுக்கும் இவர்கள் உள்ளாகவில்லை” என்று உண்மையை  கண்டறியும் குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த உண்மையை  கண்டறியும் குழுவின்  தகவல் அறிக்கை படி, “அதிகப்படியான காவல்துறையினர் துலே முஸ்லீம்களின் மீது தாக்குதல் நடத்தியதாகவும், கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்குன்டான பொதுவான சட்ட திட்டங்களை தவறவிட்டதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “துலே பகுதியின் கலெக்டர் மற்றும் உதவி துணை ஆணையர் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்யக்கோரியும், அப்பாவி மக்களை கொன்று சொத்துக்களை நாசமாக காரணமான காவல்துறையினரை  விசாரிப்பது, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது, காயத்திற்குள்ளாக்கியது, போன்ற வழக்குகளுக்கு உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதியுமாரும், குற்றவாளிகள் அல்லாதவர்களுக்கு நிதியுதவி மற்றும் மறுசீரமைப்பு திட்டத்தை அறிவிக்குமாறும்” அந்த சமூக ஆர்வளர்களின்  உண்மை கண்டறியும் குழுவின் தகவல் அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது.


வெள்ளி, ஜனவரி 18, 2013

மத்திய மாநில அரசுடன் இணைந்து செயல்படும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவணம் பல்வேறு துறைகளுக்கு ஆட்களை பணியில் சேர்க்க உள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டுள்ளது.



இதற்கு ஆன்லைன் பதிவு 19-1-2013 லிருந்து துவங்குகின்றது. chennaimetrorail.gov.in என்ற இணையதள முகவரில் விருப்பம் உள்ளவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் 20-2-2013.
இது குறித்து முழு விபரம் அறிய Click Here to download Advt PDF



செவ்வாய், ஜனவரி 08, 2013

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் தேதியை, தேர்வுத்துறை அறிவித்தது. 


பிளஸ் 2 தேர்வு, மார்ச் 1ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை நடக்கிறது . 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 27ல் துவங்கி, ஏப்ரல், 12ம் தேதி வரை நடக்கிறது. பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதால், தேர்வு அட்டவணை, எந்நேரமும் வெளியாகலாம் என, மாணவர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். தேர்வு அட்டவணை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்காக, தேர்வுத்துறை அனுப்பியிருந்தது. இதற்கு, நேற்று ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, பொதுத்தேர்வு துவங்கும் தேதி மற்றும் அட்டவணையை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பிளஸ் 2 : அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச், 1ல் துவங்கி, 27 வரை நடக்கின்றன. தொழிற்கல்வி சேர்க்கை, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடப்பதால், முக்கிய பாட தேர்வுகளுக்கு, போதுமான இடைவெளி அளித்து, அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. மொழிப்பாட தேர்வுகளுக்குப் பின், முக்கிய பாட தேர்வுகள், மார்ச், 11ல் துவங்குகிறது. அன்று, இயற்பியல் தேர்வு நடக்கிறது. 14ம் தேதி, கணிதம், விலங்கியல் தேர்வுகள் நடக்கின்றன. 18ம் தேதி, வேதியியல் தேர்வு நடக்கிறது. அடுத்து, இரு நாள் இடைவெளிக்குப் பின், 21ம் தேதி, உயிரியல், தாவரவியல் தேர்வுகள் நடக்கின்றன. இதனால், முக்கிய பாட தேர்வுகளுக்கு, கடைசி நேரத்தில், மாணவர்கள் நன்றாக தயாராவதற்கு, வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு : இத்தேர்வு, மார்ச், 27ல் துவங்கி, ஏப்ரல், 12 வரை நடக்கின்றன. இதிலும், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் தேர்வுகளுக்கு, போதிய இடைவெளி தரப்பட்டுள்ளன. கணிதத் தேர்வு, ஏப்ரல், 5ம் தேதி நடக்கிறது. 8ம் தேதி, அறிவியல் தேர்வும், 12ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடக்கிறது. பிளஸ் 2 தேர்வை, 8 லட்சம் பேரும், 10ம் வகுப்பு தேர்வை, 10.5 லட்சம் பேரும் எழுதுகின்றனர். பதிவெண்கள் எப்போது ? : பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்ரவரி இரண்டாவது வாரத்தில், செய்முறைத் தேர்வு துவங்கிவிடும். அறிவியல் பிரிவு மாணவ, மாணவியருக்கு, பொங்கல் முடிந்ததும், பதிவெண்கள் வழங்கப்படும்.பிப்ரவரி, 20ம் தேதி வரை, செய்முறைத்தேர்வு நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வுகள், காலை, 10:00 மணிக்கு துவங்கி, பிற்பகல் 1:15க்கு முடியும். 10:00 மணி முதல், 10:15 வரையான 15 நிமிடங்களில், முதல் 10 நிமிடங்கள், கேள்வித்தாளை படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிடங்கள், விடைத்தாளில் பதிவெண்கள் உள்ளிட்ட விவரங்களை பதியவும் ஒதுக்கப்படும். 3 மணி நேரம் வரை தேர்வு நடக்கும். பத்தாம் வகுப்பு தேர்வு, காலை 10:00 மணிக்கு துவங்கி, 12:45க்கு முடியும். விடை எழுதுவதற்கான நேரம், 10:15க்கு துவங்கி, 12:45 வரை, 2:30 மணி நேரம் வரை நடக்கும். பத்தாம் வகுப்பில், அறிவியல் பாடத்திற்கு செய்முறைத் தேர்வு நடக்கிறது. இத்தேர்வு, பிப்ரவரி இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ நடக்கலாம்.