அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புதுமடம் செய்தி மற்றும் தங்களின் ஆக்கங்களை இவ்விணையதளத்தில் வெளியிட இன்றே கீழ் காணும் மின்னஞசல் முகவரிக்கு தங்களின் மின்னஞசலை அனுப்பி வைக்கவும்.





mail@pdmnews.com
__________________
இது வரை நமது தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை

முகநுால்

டுவிட்டர்

Blogger இயக்குவது.
செவ்வாய், மார்ச் 26, 2013
கர்நாடகா பவர் கார்ப்பரேஷன் நிறுவனம் தொழில்துறை சார்ந்தவர்களுக்காக, சூரிய மின் சக்தியின் மூலம் தொழில்துறை பெறக்கூடிய அம்சங்கள் பற்றிய 6 நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது.

மத்திய அமைச்சகத்தின் துணையுடன் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்புக்கு ஆர்வமுடைய தொழில்முனைவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பயிற்சி முகாம் நடைபெறும் நாட்கள்: 01 ஏப்ரல் 2013 முதல் 06 ஏபரல் 2013 வரை.

மேலும் விபரங்களுக்கு www.karnatakapower.com என்ற இணையதளத்தை காணவும்.

- Thanks to dinamalar



கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில், பி.எச்டி.,யில் பல்வேறு பொறியியல் படிப்புகளில் சேர, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.



வழங்கப்படும் படிப்புகள்:

பி.எச்டி., (ஏரோஸ்பேஸ், பயாலஜிகல் சயின்ஸ் அன்ட் பயோ-இன்ஜினியரிங், கெமிக்கல், சிவில், கம்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், மெட்டிரியல் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங், மெக்கானிக்கல், போட்டோனிக் அன்ட் இன்ஜினியரிங்)

தகுதி: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதுகலை பட்டப்படிப்பில் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப் படிப்பில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் மூலம் ஆன்லைன் வழியாக  விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.400ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.200ம் வரைவோலை செலுத்த வேண்டும்.

GATE / UGC / CSIR ஆகிய நுழைவுத்தேர்வுகளில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஏப்ரல் 8ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான தகவல்களுக்கு www.iitk.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

- நன்றி தினமணி

2013 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு, விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக 15.04.2013. பி.ப 5.45 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு ஊழியர்கள், அலுவலர்கள், துறைத் தேர்வுகளை எழுத, ஏப்ரல், 15ம் தேதி வரை, "ஆன்-லைன்' வழியாக விண்ணப்பிக்கலாம்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

அரசுத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறுவதற்காக, துறைத் தேர்வுகளை எழுதுகின்றனர். ஆண்டுதோறும், மே மற்றும் டிசம்பர் மாதங்களில், இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, மே மாதம் நடக்கும் தேர்வுக்காக, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஏப்ரல், 15ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளம் (www.tnpsc.gov.in) வழியாக, துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Source : tntjsw.net


சனி, மார்ச் 23, 2013
காலனி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக் கல்வி நிறுவனம், தனது இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.


படிப்பு விபரங்கள் :

முதுநிலைப் படிப்புகள் (2 வருடங்கள்) : Fashion merchandising & Retail management Footwear design & Production management Creative design and CAD/CAM

இளநிலைப் படிப்புகள் (4 வருடங்கள்) : Fashion design Footwear design & Production management Leather goods & Accessories design

இன்டக்ரேட்டட் படிப்புகள் (5 வருடங்கள்) : Business management Retail management

இவை தொடர்பான Prospectus, இக்கல்வி நிறுவன வளாகம் மற்றும் இந்தியா முழுவதிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்சிஸ் வங்கி கிளைகள் ஆகியவற்றில் கிடைக்கும். ரூ.500 கொடுத்து அதைப் பெற்றுக்கொள்ளலாம்.

இதர அனைத்து விரிவான விபரங்களுக்கும் www.fddiindia.com என்ற வலைத்தளம் செல்க...

Thanks to dinamalar


அரசு ஊழியர்கள், அலுவலர்கள், துறைத் தேர்வுகளை எழுத, ஏப்ரல், 15ம் தேதி வரை, "ஆன்-லைன்" வழியாக விண்ணப்பிக்கலாம்" என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

அரசுத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறுவதற்காக, துறைத்தேர்வுகளை எழுதுகின்றனர். ஆண்டுதோறும், மே மற்றும் டிசம்பர் மாதங்களில், இந்ததேர்வுகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, மே மாதம் நடக்கும் தேர்வுக்காக, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.ஏப்ரல், 15ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளம் (www.tnpsc.gov.in) வழியாக,துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Source : tntjsw
புதன், மார்ச் 20, 2013
JAL International Company என்ற வளைகுடாவை சேர்ந்த கட்டுமான மற்றும் தொழில்நுட்ப உதவி சேவை அளிக்கும் நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்ட பணிகளுக்கானநேர்முகத் தேர்வு சென்னை, கொச்சின், மும்பை உள்ளிட்ட நகரங்களில் மார்ச் மாதம்13 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. எனவேஇப்பணிகளுக்கு ஏற்ற கல்வி தகுதி உடையோர் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். கூடுதல் தகவல்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளநிறுவனத்தின் இணையதள முகவரியையும், இணைப்பையும் பார்வையிடவும்...

இணையதள முகவரி : http://www.jalinternational.com.sa/
Source : tntjsw
திங்கள், மார்ச் 18, 2013

ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தில் குண்டு வெடித்து 17 பேர் பலியாயினர். இந்த குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் யார்? என புலனாய்வு செய்து கண்டு பிடிப்பதற்கு பதிலாக எடுத்த எடுப்பில் முஸ்லிம்கள்தான் இதைச் செய்தனர் என்று முடிவு செய்துவிட்ட போலீசாரும், ஊடகங்களும் இது சம்பந்தமான பெய்ச் செய்திகளை கசிய விட்ட வண்ணம் உள்ளனர். கோவையில் இருந்து கேரளா நோக்கி மினி லாரி ஒன்று சென்றதாம்! அந்த லாரியில் 5 டன் அம்மோனியம் நைட்ரேட் இருந்ததாம்! அந்த மினி லாரியை கேரள மாநில மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல்கரிம் என்பவர் ஓட்டிச் சென்றாராம்! இந்த லாரியை மடக்கிப் பிடித்த போலீசார் கோவை – கேரளாவைத் தகர்க்கும் சதித் திட்டத்தில் இந்த வெடி மருந்துகள் கடத்தப்பட்டதா? என்பது குறித்து கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் என 25-02-13 அன்று தினத் தந்தி செய்தி வெளியிட்டது. இந்தச் செய்தி மூலம் ஹைதராபாத்தில் குண்டு வைத்தது முஸ்லிம்கள்தான் என பிற சமூக மக்களிடம் பதிய வைத்தாயிற்று.
ஹைதராபாத் குண்டு வெடிப்புக்கும், அப்துல் கரிமுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரை கேரள போலீசாரோ, என்.ஐ.ஏ.போலீசாரோ கைது செய்யுவும் இல்லை; விசாரிக்கவும் இல்லை என்ற உண்மையை தினத் தந்தி சொன்னதா? இல்லை.
ஹைதராபாத் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது ஆதம். சோமாலியா நாட்டைச் சேர்ந்த அப்துல்லா உம்ரன் மக்ரன் ஆகிய இருவர் பீகார் மாநிலத்தில் இருந்து நேபாள எல்லைக்குள் தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டதாக 25-02-13 அன்று செய்தி வெளியிட்ட தினத் தந்தி, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு லேப்டாப், பேனா, கேமரா செல், ஹைதராபாத்தில் எடுக்கப்பட்ட டிரைவிங் லைசென்ஸ், ஐதராபாத்-செகந்ராபாத் நகர படங்கள் ஆகியவற்றை கைப்பற்றியதாக செய்தி வெளியிட்டது. இதன் மூலம் ஹைதராபாத் குண்டு வெடிப்பை முஸ்லிம்கள்தான் நடத்தினார்கள் என அப்பாவி மக்களை நம்ப வைத்தது தினத் தந்தி. தமிழ்நாட்டில் மாணவ-மாணவிகள் அனைவரும் லேப்டாப், பேனா, கேமரா செல், டிரைவிங் லைசென்ஸ், ஊரின் வரை படங்கள் வைத்துள்ளனர். இவையெல்லாம் தீவிரவாதிகளின் ஆயுதங்கள் என்று யாராவது சொல்வார்களா? முஸ்லிம்களோடு சம்பந்தப்படுத்தி, இந்த பொருட்களும் தீவிரவாதிகளின் ஆயுதங்கள் என தினத்தந்தி காட்ட முயலுகிறது.
ஆந்திர மாநில பி.ஜே.பி.யின் தலைவராக கிரன் ரெட்டி என்பவர் இருக்கிறார். அவருக்கு ஒரு மர்மக் கடிதம் வந்ததாம்! அந்தக் கடிதத்தில் ‘ஹைதராபாத்தில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது நாங்கள் தான். எங்களது அடுத்த தாக்குதல் ஹைதராபாத்தின் பேகம் பஜார் தான்’ என்று குறிப்பிட்டு இருந்ததாம். இந்த கடிதம் பி.ஜே.பி.யின் செட்டப் நாடகம் என இப்போது சிலர் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் மதுரை தினகரன் 25-02-13 அன்று இந்த கடிதத்தின் சாராம்சத்தை வெளியிட்டு குண்டு வெடிப்பு என்றால் முஸ்லிம்கள் என அப்பாவி மக்களின் மனதில் பதிய வைத்துவிட்டதே! இந்தப் பதிவை யார் அப்புறப்படுத்துவது?
ஹைதராபாத்தில் குண்டு வைத்த தீவிரவாதிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெடி பொருட்களுடன் நுழைந்து விட்டனர். அதனால் காவல்துறை சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது என்று அதே நாளின் முதல் பக்கத்தில் தினகரன் பத்திரிகை செய்தி வெளியிட்டு குமரி மாவட்ட முஸ்லிம்களை கதி கலங்க வைத்ததே! அந்த கலங்கத்தை யார் தான் போக்க முடியும்? கடைசியில் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள செய்யது மக்பூல், இம்ரான் கான், மற்றும் நெல்லூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு முஸ்லிம்கள்தான் ஹைதராபாத் குண்டு வெடிப்புக்கு காரணம் என்று 4-3-13 அன்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளதே! இதை எங்கு போய் சொல்வது?
ஜெயிலில் இருந்து இவர்கள் வெடிகுண்டு வெடிப்பை நடத்தினார்கள் எனில் இவர்களுக்கு ஜெயில் அதிகாரிகள் துணை புரிந்துள்ளார்கள் என்று அர்த்தமாகிறது. இந்த ஜெயில் அதிகாரிகளை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தினமலர் சொல்லுமா? சொல்லவே சொல்லாது. இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் அல்லவா தினமலர் அப்படிச் சொல்லும். அது பொய் என்று தினமலருக்கு நன்கு தெரியும் போது அது எப்படி இவ்வாறு சொல்லும்?
இவர்களின் நோக்கம் குண்டு வைத்த தீவிரவாதிகளை பிடிப்பதல்ல. மாறாக முஸ்லிம்கள் மீது குண்டு வெடிப்பு பழியை தூக்கிப் போட வேண்டும். குண்டு வைத்த உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டும் என்பதே! இதுதான் இவர்களின் நோக்கம் எனும் போது பத்திரிகை தர்மம் எப்படி காக்கப்படும்? இந்தியா எப்படி உருப்படும்? என்று ஒவ்வொரு இந்திய மக்களின் உள்ளத்திலும் கேள்வி எழத்தானே செய்யும்!
Source : tntj.net


திங்கள், மார்ச் 11, 2013
ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், அடகு வைத்த 500 பவுன் தங்க நகைகளை மோசடி செய்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். ராமநாதபுரம் கண்ணன் கோவிலைச் சேர்ந்த குலாம் என்பவரும் அவரது மனைவி சீனியம்மாளும் சேர்ந்து, ராமநாதபுரம், புதுமடம், பெரியபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த வட்டிக்கு பணம் வாங்கித் தருவதாகக் கூறி 500 சவரன் தங்க நகைகளை மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து கீழக்கரையைச் சேர்ந்த உமுல்கசியா என்பவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தம்பதியைக் கைது செய்தனர்.

நன்றி : புதியதலைமுறை
வெள்ளி, மார்ச் 01, 2013
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பேக்கேஜிங், 1 வருட கிராஜுவேட் டிப்ளமோ படிப்பை வழங்குகிறது. 

சேரும் தகுதிகள் : அங்கீகரிக்கப்பட்ட ஏதேனுமொரு பல்கலையில் பட்டப் படிப்பு முடித்து, 1 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட டிப்ளமோ முடித்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள்.

இதில் சேர தகுதியானவர்கள்.இந்தாண்டு ஜனவரி 1 முதல் விண்ணப்ப படிவங்கள் கிடைக்கின்றன. 

கல்விக் கட்டணம் : ரூ.40,000 (சர்வீஸ் கட்டணமும் உண்டு). சான்றிதழ் : ஆசியன் பேக்கேஜிங் பெடரேஷன் அங்கீகாரத்துடன், “Graduate Diploma in Packaging” என்ற பெயரில் சான்றிதழ் வழங்கப்படும். 

பதிவு : பதிவுப் படிவம், விவரணம் மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றை, ரூ.100ஐ பணமாகவோ அல்லது டிடி.,யாகவோ செலுத்தி (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பேக்கேஜிங் என்ற பெயரில் டிடி எடுக்க வேண்டும்) பெற்றுக் கொள்ளலாம்.



பயிற்சி வகுப்புகள் மற்றும் இதர பிற விபரங்களை அறிய www.iip-in.com என்ற வலைத்தளம் செல்க.

- thokuppu : thiruththuraipundi abdul malik & tntjsw.net



மாணவர்களை இடைநின்று வேறு பள்ளியில் சேர்க்க மாற்று சான்றிதழ் வேண்டாம்...



  • கல்வி உரிமை சட்டத்தின்படி, 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், இடைநின்று, வேறு பள்ளியில் சேரும் போது, அவர்களிடம், பள்ளி மாற்றுச் சான்று கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது; வயதை நிரூபிக்கவும் சான்று கேட்க கூடாது என்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில், 13 வயதுக்கு உட்பட்டோர், 8 ம் வகுப்பு வரை படிக்க வேண்டும். பள்ளிப்படிப்பை தொடர முடியாதவர்கள், பிழைப்பிற்காக இடம் மாறியவர்கள், இச்சட்டத்தால் பலன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. 
  • புதிய சட்டப்படி, “13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இடை நின்று வேறு பள்ளியில் சேரும் போது, அவர்களிடம் பள்ளி மாற்றுச் சான்று கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது. வயதை நிரூபிக்கவும் சான்று தேவையில்லை. பெற்றோர் உறுதி மொழியை வயது சான்றிதழாக ஏற்று, தேர்வுக்கு முதல் நாள் கூட சேர்க்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இதை உடனடியாக அமல்படுத்த, தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இச்சட்டத்தின் படி, பிழைப்பிற்காக வெளி மாவட்டங்களில் குடியிருப்போர், தங்கள் குழந்தைகளை, வசிக்கும் பகுதி பள்ளிகளிலே சேர்க்க, வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Source : tntjsw.net

தொழில்துறை வளர்ச்சியில் ஏற்படும் அபாயங்கள், விபத்துக்கள், தீமைகளின் அளவை குறைக்க வேண்டும் என்பதே இன்டஸ்ட்ரியல் சேப்டி மேனேஜ்மென்ட் துறையின் நோக்கம்.இப்படிப்பை, சிறந்த கல்வி நிறுவனங்களில் கற்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அரசு சாரா நிறுவனங்கள், கட்டுமான நிறுவனம்,உற்பத்தி பிரிவுகள், மருத்துவமனைகள், பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் ஆலோசனை நிறுவனங்கள் என பல துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.


  • இதில் டிப்ளமோ படிப்பு, ஒரு வருடம் பயிலக் கூடியதுஇதைப் படிக்க 10ம் வகுப்பு /பிளஸ் 2/ டிப்ளமோ/ ஐ.டி.ஐ.,தகுதி போதுமானது.
  • முதுநிலை டிப்ளமோ படிப்புக்கு, பி.எஸ்,சி., இயற்பியல்வேதியியல்எலக்ட்ரானிக்ஸ் படிப்பை முடித்திருக்கவேண்டும். 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்அல்லது எம்.இ., மற்றும் பி.இ., முடித்திருக்கவேண்டும்இதற்கு முன் அனுபவம் தேவையில்லைஇப்படிப்பு ஒரு வருடம் பயிலக் கூடியது.

கல்வி நிறுவனங்கள் :
1) பெரியார் மணியம்மை யுனிவர்சிட்டிதஞ்சாவூர்.
2) மகாத்மா காந்தி லேபர் இன்ஸ்டிடியூட்ஆமதாபாத்.
hzzp://mgliahd.org/
3) குரு ஜம்பேஷ்வர் யுனிவர்சிட்டி ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜிஅரியானா.
வேலை வாய்ப்பு :
டிப்ளமோ அல்லது சான்றிதழ் பிரிவில் இப்படிப்பை முடித்தவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகள் உள்ளன. செய்ல், டிஸ்கோ, கோல் இந்தியா லிமிடெட், பாபா அணு ஆராய்ச்சி மையம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்கள், இன்ஜினியரிங் படிப்புடன், இப்படிப்பையும் சேர்த்து முடித்தவர்களை தேர்வு செய்கின்றனர். இங்கிலாந்து, ஓமன், ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வாய்ப்புகள் உள்ளன.

- thokuppu – thiruththuraipoondi abdul malik & tntjsw.net