அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புதுமடம் செய்தி மற்றும் தங்களின் ஆக்கங்களை இவ்விணையதளத்தில் வெளியிட இன்றே கீழ் காணும் மின்னஞசல் முகவரிக்கு தங்களின் மின்னஞசலை அனுப்பி வைக்கவும்.





mail@pdmnews.com
__________________
இது வரை நமது தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை

முகநுால்

டுவிட்டர்

Blogger இயக்குவது.
சனி, அக்டோபர் 20, 2012

வெளிவந்து விட்டது ஆன்லைன்பிஜேயின் வீடியோ இணையதளம். அல்ஹம்துலில்லாஹ்..!  

இதில் நேயர்களுக்கு தேவையான ஏரளாமான வசதிகளை இடம் பெறச் செய்துள்ளோம். குறிப்பாக, இதில் இடம் பெறும் வீடியோக்களை கணிணி , ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோனிலும் பார்த்துக் கொள்ளலாம். ஒரு மணி நேர வீடியோவில் நேயர்கள் தங்களுக்கு தேவைான பகுதியை எளிதில் பார்க்கலாம் அந்த பகுதி டவுன்லோடு ஆகும் வரை காத்திருக்க தேவையில்லை. இன்னும் பல்வேறு வசதிகளுடன் Youtube ஐ ஒழித்து கட்ட வெளிவந்து விட்டது நமது வீடியோ இணையதளம்!

* நேயர்களே வீடியோக்களை அப்லோடு செய்து கொள்ளலாம். Take a Look : http://video.onlinepj.com/ பார்த்து விட்டு , வீடியோ இணையதளம் குறித்த தங்களின் கருத்துக்களை webmaster@onlinepj.com க்கு அனுப்பலாம்.

இப்படிக்கு 
ஆன்லைன் பி.ஜே-வெப்மாஸ்டர் 


நன்றி : ஆன்லைன் பி.ஜே.காம்


புதன், அக்டோபர் 17, 2012

இன்று மக்ரிபிலிருந்து தமிழகத்தில் துல்ஹஜ் மாதம் ஆரம்பம், அக்டோபர் 27 ஹஜ் பெருநாள்!

பிறை தேட வேண்டிய நாளான கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி மக்ரிபிற்கு பிறகு தமிழகத்தில் எங்கும் பிறை தென்படாததால் நபி வழிப்படி துல்கஅதா மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து இன்று (அக்டோபர் மாதம் 17ஆம் தேதி) மக்ரிபிலிருந்து துல் ஹஜ் மாதத்தின் பிறை தமிழகத்தில் ஆரம்பமாகவுள்ள என்பதனை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.
இதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 27 ஆம் தேதி தமிழகத்தில் ஹஜ் பெருநாள் என மாநிலத் தலைமை அறிவிக்கின்றது.

இப்படிக்கு 
TNTJ-தலைமையகம்

செய்திகள் : நன்றி tntj.net
திங்கள், அக்டோபர் 15, 2012

கடந்த வாரத்தில் தமிழகத்தினை உலுக்கி எடுத்த டெங்கு காய்ச்சல் பற்றியும் அதற்கான அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் பார்க்கலாம்.

கடந்த ஆண்டு பல்வேறு நிறுவனங்கள்அமெரிக்க ஃபெடரல் ட்ரெட் ஆணையத்திடம் (FTC) கூகுள் மீது மோசடி புகார் அளித்தனர். புகார் என்ன வெனில் ,
கூகுள் தனக்கு போட்டியாக உள்ள நிறுவனங்களை search result ல் வேண்டுமென்றே பின்னுக்கு தள்ளி தனது தயாரிப்புகளை முதன்மைப்படுத்தி கான்பிக்கின்றது. இதனால் பெரும் வியாபார இழப்பு ஏற்படுகின்றது. கூகுள் தன்னிடம் உள்ள ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தி google ன் தயாரிப்புகளை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்தும் விதத்தில் search result ஐ உருவாக்குகின்றது.
மேற்கண்ட புகாரை பல்வேறு நிறுவனங்கள்  அளித்ததை தொடர்ந்து ஃபெடரல் ட்ரெட் ஆனையம் கடந்த 19 மாதங்களாக இது குறித்து ஆய்வு செய்தது.
தற்போது தனது ஆய்வறிக்கையின் 100 பக்க நகலை தயாரித்துள்ளது. அந்த நகல் ஆணையத்தில் உள்ள 5 அதிகாரிகளிடம் பரிமாரிக் கொள்ளப்பட்டுள்ளது.
5 அதிகாரிகளில் 4 நபர்கள் கூகுளின மீது கூறப்பட்டுள்ள மோசடி புகாரை உறுதி செய்துள்ளனர். மேலும் கூகுளின் மீது சட்டப்படி வழக்கு தொடர ஆனையம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என ஆணையத்தின் தலைவர் Jon Leibowitz கடந்த மாதம் தெரித்தள்ளார்.
FTC சேர்மன்

மேலும் இதற்காக சிறப்பு வழக்கறிஞரை கடந்த ஏப்ரல் மாதம் ஆணையம் நியமித்துள்ளது குறிப்பிடதக்கது.
பொது மக்கள் ஒரு பொருளை தேடும் போது , தனது google shopping மற்றும் google place,goodl adword ல் உள்ள product களையே முதன்மை படுத்தி கான்பிக்கின்றது கூகுள்.
இதன் மூலம் அனைத்து நிறுவனங்களையும் தன்னிடம் விளம்பரம் செய்ய நிர்பந்திப்பதோடு மட்டுமல்லாமல் தனது போட்டியாளர்களை தனது ஆதிக்கத்தின் மூலம் வரள விடாமல் பின்னுக்கு தள்ளுகின்றது என கூகுளின் மீது ஆய்வறிக்கையில் குற்றச் சாட்டு கூறப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து , கூகுள் , ”ஆணையத்தின் எந்த கேள்விக்கும் நாங்கள் பதில் அளிக்க தயாராக” இருப்பதாக கடந்த வெள்ளி அன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் Texas, Ohio, New York, California, Oklahoma, Mississippi ஆகிய மாநிலங்கள் இதே புகாரின் பேரில் google ன் நடவடிக்கைகளை ஆய்வு செய்து கொண்டிருப்பது குறிப்பிடதக்கது.
இதே குற்றச்சாட்டு ஈரோப்பிலும் எழுந்து விசாரனை நடந்து வருவதும் குறிப்பிடதக்கது.
புகார் அளித்த நிறுவனங்களில் ஒன்றான மிகப்பெரும் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் NextTag கூறுகையில்,
கூகுள் ஷாப்பிங் சேவையை துவங்கியதிலிருந்து எங்கள் இணையதளத்தின் பார்வையார்கள் பாதியாக குறைந்து விட்டனர். ஆய்வு செய்து பார்த்ததில் google ல் இருந்து வரும் நேயர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து இருந்தது. இதனை சரி செய்யும விதமாக google இடம் விளம்பரம் (Google AdWord) செய்யும் தொகையை இரு மடங்காக்கினோம் பிறகு 60 சதவிகித பார்வையாளர்கள் google மூலம் வர ஆரம்பித்தனர். தனக்கு போட்டியானவர்களை search result ல் கூகுள் வென்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றது இதன் மூலம் தெரிகின்றது.
எனத் தெரிவித்துள்ளது.
Apple iphone மற்றம் ipad ல் உள்ள சஃபாரி browser ஐ பயன்படுத்துவர்களின் privacy தகவல்களை cookies கள் மூலம் திருடி Apple சஃபாரி browser ன் privacy விதிமுறைகளை google மீறியதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றத்திற்காக இதே அமெரிக்க ஃபெடரல் ட்ரெட் ஆனையயம் தான் கூகுளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 2.5 கோடி அமெரிக்க டாலர் அபராம் விதித்தது.
இன்டர்நெட் உலகில் மிக உயரிய தொழில் நுட்பத்துடன் எத்தனை நிறுவனங்கள் வந்தாலும் அவைகள் இன்டர்நெட்ல் முதன்மை இடத்திற்கு வராமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.
மக்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ள கூகுள் தன்னை தவிர மற்ற யாரும் இன்டர்நெட் உலகில் முதன்மை இடத்திற்கு வந்து விடக்கூடாது என்பற்காக தனது மிகப்பெரும் அதிக்கமான Search Engine ஐ கருவியாக பயன்படுத்துகின்றது.
தற்போது இதற்கு உலகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிழப்பியுள்ளதை தொடர்ந்து விரைவில் இந்த நிலை மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. அல்ஹம்துலில்லாஹ்!
தாங்கள் பயன்படுத்தும் Google சேவைக்கு மாற்று சேவையை பயன்படுத்த விரும்புவர்கள் http://www.bing.com/ க்கு சென்று alternative to என தட்டச்சு செய்து இறுதியில் தாங்கள் பயன்படுத்த விரும்பும் சேவையை குறிப்பிட்டு தட்டிப்பாருஙகள். ஏராமாள புதுப் புதுப் மாற்று சேவை நிறுவனங்களின் பட்டியல் கிடைக்கும்.
உதாரணமாக gmail க்கு மாற்று சேவை தேவை எனில் alternative to gmail என தட்டச்சு செய்து தட்டி பாருங்கள்..
ஒவ்வொன்றிற்கும் எந்த ஒன்றையும் வரையறுக்காமல் அவரவர் தனக்கு விருப்பமான மாற்று சேவையை தேர்வு செய்து கொள்வது நல்லது. கூகுள் இன்றைக்கு சர்வாதிகாரித் தனமாக நடந்து கொள்வதற்கு காரணம் அனைவரும் அந்த ஒன்றில் போய் விழுவது தான், தன்னை விட்டால் ஆள் இல்லை என ஆடுகின்றான்.  எனவே அவரவர் தனக்கு விரும்பமானதை பயன்படுத்திக் கொண்டால் google போன்று இன்னோரு சர்வாதிகாரி உருவாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.

செய்திகள் : நன்றி tntj.net


வெள்ளி, அக்டோபர் 12, 2012
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது புதிய வாக்காளர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்கல், பெயர் திருத்தம் ஆகியவை நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.வரும் 2013ம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்காக புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்தல் ஆகிய பணிகள் தற்போது மாவட்டத்தில் நடந்து வருகிறது. பொதுமக்கள் வாக்குச்சாவடி நிலைய மையங்களுக்குச்சென்று உரிய படிவங்களை பெற்று இம்மாதம் 31ம் தேதி வரை பூர்த்தி செய்து கொடுக்கலாம். இதுதொடர்பாக சிறப்பு முகாம்கள் அக்.14 மற்றும் அக்.21 ஆகிய தேதிகளில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் நடைபெறுகிறது. பொதுமக்கள் தாங்கள் பகுதியில் உள்ள மையங்களில் படிவங்களை பெற்று வாக்காளர்களாக சேரலாம் என என கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் 2013ம் ஆண்டு சிறப்பு சுருக்க திருத்த பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் ஆண்கள் 4 லட்சத்து 84 ஆயிரத்து 514ம், பெண்கள் 4 லட்சத்து 79 ஆயிரத்து 156 வாக்காளர்களும் மற்றவர்கள் 55 பேர் உள்பட மொத்தம் 9 லட்சத்து 63 ஆயிரத்து 725 வாக்காளர்கள் உள்ளனர். 

செய்தி : நன்றி தினகரன்.


வியாழன், அக்டோபர் 11, 2012
தொழுகை நேரம் மாற்றப்பட்டுள்ளது..! தொழுகை நேரம் மாற்றப்பட்டுள்ளது..! தொழுகை நேரம் மாற்றப்பட்டுள்ளது..!
முகவை மாவட்டத்தில் பருவ மழை பொய்த்துப் போனதால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் வற்றிப் போகும் நிலை உருவாகியுள்ளது. மழையை பொழியச் செய்பவன் இறைவன் என்பதால் அந்த இறைவனிடத்தில் பணிந்து பிரார்த்தனை செய்வது தான் இதற்கு ஒரே வழி என்று இஸ்லாம் கூறுகின்றது. அந்த அடிப்படையில் வரும் ஞாயிற்று கிழமை (14-10-12) TNTJ புதுமடம் கிளையின் சார்பாக மழைத் தொழுகை ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.




இடம் : 
 தெற்க்குத் தெரு 
கடற்கரை (மிலகப்பா அருகில்) - 
 புதுமடம்

நேரம் : காலை 08:00 மணியளவில் (இன்ஷா அல்லாஹ்)


இமாம் : அர்ஷத் அலி MISC (TNTJ - மாநில பேச்சாளர்)


குறிப்பு : 
 பெண்களுக்கு தனி இட வசதி ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அணைவரையும் பிரார்த்தனையின் பக்கம் அழைக்கிறது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
புதுமடம் கிளை.


மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் நலீம் : 9043727544, ஜலாலுதீன் : 9042880817, பகுரூதீன் : 9789246305.

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேக கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது. அல்-குரான் (24:43)





புதன், அக்டோபர் 10, 2012

சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.மேலும் இதுவல்லாத மாற்று மருத்துவ முறைகளிலும் சிகிச்சைகள் உள்ளதாக சிலர் ஆலோசனை கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக படைத்தவனின் அருள் கொண்டே தவிர நிவாரணம் இல்லை என்பதே நமது நம்பிக்கை.
வழக்கம் போல் அவர்கள் தமது பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
எனவே அவர்களுக்காக வல்ல அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நேரிலோ அல்லது தொலைபேசியிலோ அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து சகோதரர் பி.ஜே. அவர்கள் மாநில நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தை கீழே தருகிறோம்.
இப்படிக்கு
மாநில நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
10.10.2012
சகோதரர் பி.ஜே. அவர்களின் கடிதம்
மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். எனது உடல் நிலை குறித்து உங்களுக்கு இருக்கும் அக்கரையை நான் அறிவேன். ஆனாலும் என்ன சிகிச்சை செய்ய வேண்டி வந்தாலும் என் சக்திக்கு உட்பட்டு என்ன செய்ய இயலுமோ அதை இன்ஷா அல்லாஹ் நான் செய்து கொள்வேன். ஜமாஅத் மூலமோ தனிப்பட்ட நபர்கள் மூலமோ எனது சிகிச்சைக்காக செலவு செய்வதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
எனது நோய் தனிப்பட்ட மனிதன் என்ற முறையில் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஜமாஅத் பணிகளால் ஏற்படும் இழப்புகளைத் தான் ஜமாஅத் செய்யும் கடமை உண்டு.
ஒருவேளை என்னால் செலவு செய்ய இயலாத அளவுக்கு பெரும் செலவு ஏற்படும் நிலை வந்தால் நான் அழகிய பொறுமையை மேற்கொள்வேனே தவிர யாருடைய உதவியையும் நான் பெற்று சிகிச்சை மேற்கொள்ள நான் தயாராக இல்லை. இதற்காக யாரிடமும் கடனாகக் கூட வாங்கி செலவிடவும் நான் தயாராக இல்லை. என் சக்திக்கு உட்பட்ட வகையில் நான் முடிவு செய்யும் வகையில் என்னை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
என் மருத்துவ செலவு தொடர்பாக எந்த ஆலோசனையும் செய்ய வேண்டாம் என்று கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் சில நிர்வாகிகள் இதை தமக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இது மறைக்க வேண்டிய விஷயம் அல்ல. மறைப்பதால் எந்த நன்மையும் இல்லை. நோய் வந்தால் ஃபித்னா செய்வார்கள் என்று நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறாகும். எந்த ஃபித்னா வந்தாலும் அதற்கு மார்க்க அடிபடையில் பதில் இருக்கும் போது பித்னாக்களுக்குப் பயந்து மறைப்பது ஏற்புடையதாக இல்லை. மறைக்கவும் முடியாது.
நான் மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது அடுத்த நிமிடம் உளவுத்துறைக்கு தெரிந்து எதிரிகளின் இயக்கங்களுக்கும் உடனே தெரிந்து விடும். அவர்கள் வழியாக நம் நிர்வாகிகளுக்குத் தெரியவரும் போது அது ஜமாஅத்தைப் பாதிக்கும். மனிதனுக்கு நோய் வருவது இயல்பானது தான். அல்லாஹ் இதுவரை எந்தப் பெரிய நோயும் இல்லாமல் எனக்கு பேருதவி புரிந்துள்ளான். இதுதான் ஆச்சரியமானது. இப்போது நோய் வந்துள்ளது ஆச்சரியமானது அல்ல. ஏதோ கொலைக் குற்றத்தை மறைப்பது போல் நோயை நீங்கள் மறைப்பதாக நான் கருதுகிறேன்.
புற்றுநோய் என்பது ஆபத்தான நோய் என்றாலும் மருத்துவ சிகிச்சை பெரும்பாலும் பயனளிப்பதில்லை என்றாலும் அல்லாஹ்வின் அருளால் குணமாக வாய்ப்பு உள்ளது. எனவே இதை நிர்வாகிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் சொல்வதால் பலருடைய துஆக்கள் எனக்குக் கிடைக்கும். அதை நீங்கள் தடுக்கத் தேவை இல்லை.
அன்புடன்
பி.ஜைனுல் ஆபிதீன்
10.10.2012
செவ்வாய், அக்டோபர் 09, 2012

சமீபத்தி்ல சிக்காக்கோவில் உள்ள Chicago Booth School of Business classified என்ற பல்கலைகழகம் ஜெர்மனியில் ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. 18 வயது முதல் 82 வயது வரை உள்ளவர்களிடம் இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
தற்போதைய சமுதாயத்தினர் எதில் அதிகம் மோகம் கொள்கின்றனர் என்பதை அறிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சியூட்டம் தகவல்கள் வெளியாகிள்ளது.
தங்களின் பார்ட்னரிடம் செல்வதை விட Facebook & Twitter இடம் செல்வதை தான் தற்போதை சமுதாயத்தினர் அதிகம் விரும்புகின்றனர். அதில் தான் அதிக மோகம் கொண்டுள்ளனர். அதை விட்டு அவர்களால் வெளியே வர முடிவதில்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செக்ஸ் மற்றும் சிகிரெட்டில் கிடைக்கும் இன்பத்தை விட Facebook மற்றும் Twitter ல் இன்றைய சமுதாயத்திற்கு அதிக இன்பம் கிடைக்கின்றதாகவும் அது எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் எங்கு வேண்டுமானாலும் எப்பொழு வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளலாம் என்பதாலும் அதில் தான் அவர்கள் அதிகம் மோகம் கொள்கின்றனர் என ஆய்வு தெரிவிக்கின்றது…
இன்றைய இளைய சமூதாயம் Facebook மற்றும் Twitter ல் மூழ்கி கிடக்கும் காரணத்தை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளது சிக்காக்கோ பல்கலைகழகம்.
இப்படி மோகம் கொள்ள காரணம் என்ன என்பதை பார்ப்போம்:
அனைவருக்கும் புரியும் விதத்தில் சுருக்கமாக சொல்வதாக இருந்தால் இரண்டு இணையதளங்களும் ”மாமா”  வேலையை தான் பார்க்கின்றனர். அதை தொழில் நுட்ப ரீதியாக செய்கின்றனர். இவைகளை eMaMa என அழைத்தால் அது மிகையாகாது.
பஸ்டாண்டு பஸ்டாண்டா அழைந்து, தெரு தெருவா சுத்தி, பல மணி நேரம் வெயிட் பன்னி, பொண்ணு பையன தேட்ரதும் பையன் போன்ன தேட்ரதும் அந்த காலம். ஆனா இப்ப உக்காந்த இடத்துல இருந்துக்கிட்டே பொண்ணு தான் விரும்பிய பையன் கிட்ட கடல போடவும் பையன் தான் விரும்பிய போண்ணு கிட்ட கடல போடவும் பயன்படுத்தப்படும் இணையதளங்கள் தான் இந்த  Facebook மற்றும் Twitter.
”ஒருத்தன், ஒருத்தி” என்பதெல்லாம் போய் ஒரே நேரத்துல ஒரு பையன் பல பொண்ணுங்க கிட்டயும் ஒரு பொண்ணு பல பையங்க கிட்டயும் Facebook மற்றும் Twitter ல் மூலம் தொடர்பு வைத்துக் கொள்கின்றனர். அதனால் தான் செக்ஸ் சிகிரட்டை விட அதிக மொகம் இதில் வருகின்றது.
இதில் நடக்கும் பல கூத்துக்கள் செய்திகள் படிப்பவர்களுக்கு நன்கு தெரியும்.
அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில தன்னோட தங்கச்சி கிட்டயே Facebook மற்றும் Twitter ல் கடல போட்ட அண்ணங்க நிரைய பேரு இருங்காங்க.
வேறு யாரோன்னு நினைச்சு தன்னோட மனைவி கிட்டயே கடல போட்டு மாட்டிக்கிட்ட புருசன் எத்தனை பேரு..
போண்டாட்டி புருசன் கிட்ட மாட்டிக்கிட்ட கதை..
அம்மா மகன், அப்பா போன்னு இப்படி எழுவதற்கே கை கூசும் அளவிற்கு இதில் அசிங்கள் அறங்கேரிக் கொண்டிருக்கின்றது..
ஏதாவது ஒரு பெயர் மற்றும் படத்தை போட்டு கணக்கை துவங்கி விடுகின்றனர்.  பிறகு கண்ணுல பட்ரவங்கிட்டயெல்லாம் கடல போட்ரது.. அதான் EMaMa க்கள் (facebook & twitter) இருக்காங்களே அங்க இங்க இருக்கவங்களோட போட்டோ பேயரயெல்லாம் வழிய வந்து காட்ரதுக்கு.. தேவையானத செலக்ட் பன்னிக்க வேண்டியது தான்!
இதில் ஏமாந்து தங்களது கற்பை, பணத்தை இழந்தவர்களின் பட்டியல் ஏராளாம் உள்ளது.
பெற்றோர்களுக்கு..
வெளிநாட்டில் இருக்கும் பெற்றவர்கள் நம்ம புல்ல நல்லா படிக்கட்டும் ன்னு கம்யுட்டர், செல்போனு, இன்டர்நெட்டுன்னு வாங்கி கொடுத்து விடுங்கின்றனர். பிள்ளைகள் என்ன செய்கின்றனர் என கண்கானிப்பது இல்லை வீட்டில் உள்ள பெண்களுக்கு விபரம் தெரியாது. பிள்ளைகள் , பெற்றவர்கள் வாங்கிக் கொடுத்ததை நல்லவற்றிற்கு பயன்படுத்தாமல் இது போன்று சீரழிந்து போய் விடுகின்றனர்..
பிள்ளைகளுக்கு செல்போன்களை வாங்கி கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.  ஏன் எனில் தற்போதைய பெரும்பாலான போன்களில் இந்த இரண்டு eMaMa க்களும் இலவச இணைப்பாக வருகின்றனர்.
கணிணையை பொறுத்தரை அறிவை வளர்ந்து கொள்வதற்கு அது இன்றைக்கு மிகவும் அவசியமானது. எனினும் பிள்ளைகள் அதை இது போன்று தவறான விசயங்களுக்கு பயன்படுத்த விடாமல் தடுக்க ஏராளமான Parent control மென்பொருள்கள் உள்ளது.
உதாணரத்திற்கு ஒன்றை குறிப்பிடுகின்றோம்:
இதை கணிணியில் நிறுவி வி்ட்டால் இது போன்று சோசியல் நெட்வொர்க் இணையதளம் மட்டுமல்லாமல் மற்ற தேவையில்லாத எல்லா இணையதளத்தையும் தானாக ப்ளாக் செய்து விடும். அது போன்ற இணையதங்களை கணிணியில் பிள்ளைகளால் பார்க்க முடியாது.
Facebook மற்றும் Twitter போன்ற இணையதளங்கள் நல்லதிற்கு ஆரம்பிக்கப்பட்டதோ கேட்டதற்கு ஆரம்பிக்கப்பட்டதோ எதுவாக இருந்தாலும், கேட்டவைகளுக்கு தான் தனது சேவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றது என தெரியவந்தும் அதை தடுக்க அல்லது நிறுத்த முயற்சி எடுப்பது தான் சமுதாய நலம் கொண்ட நிறுவனங்களின் கடமை.
ஆனால் சமுதாய நலனை மறந்து விட்டு பணம் சம்பாதிப்பதற்காக சமுதாய சீர்கேடுகளை ஊக்கப்படுத்தும் வண்ணம் தினந்தோறும் பல்வேறு வசதிகளை வழங்கி  இளைய சமுதாயத்தை தன் பக்கம் அடிமையாக்கி வைத்துள்ளது.
விழித்துக் கொண்டவர் பிழைத்து கொண்டார்!
பேஸ்புக்கில் 83 மில்லியன் போலி கணக்குகள் இருப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் பேஸ்புக்கே அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

செய்திகள் : நன்றி tntj.net


சனி, அக்டோபர் 06, 2012
இப்ராஹீம் நபியவர்களின் தியாகத்தை நினைவு கூர்வதற்காகவும், அவர்களைப் போல் எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என்று உறுதி எடுப்பதற்காகவும் வசதி வாய்ப்புள்ளவர்கள் மீது குர்பானி கொடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.

ஏழைகளின் துயர் துடைப்பது குர்பானியின் அடுத்த நோக்கமாக அமைந்துள்ளது. இதனால்தான் வறுமை நிலவிய ஆரம்ப காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஆணையிட்டிருந்தார்கள். பின்னர் செழிப்பான நிலை ஏற்பட்டபின் இக்கட்டளையைத் திரும்பப் பெற்றார்கள்.


ஏழைகளின் துயர் துடைப்பதும் குர்பானியின் நோக்கம் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
ஒரு பக்கம் ஏராளமாக குர்பானி கொடுக்கப்பட்டு வாங்குவோரின்றி மாமிசம் சீரழிவதையும், இன்னொரு பக்கம் போதிய மாமிசம் கிடைக்காமல் ஏழைகள் திண்டாடுவதையும் நாம் காண்கிறோம்.
இந்த ஏற்றத் தாழ்வை அகற்றி ஏழைகளுக்கு தாராளமாக இறைச்சி கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தாங்கள் வழங்கும் ஆடு மாடுகளை டிஎன்டிஜே புதுமடம் கிளையில் வழங்கினால், தேவையான பகுதிகளில் முறையாக வினியோகம் செய்து அதன் கணக்கு விபரத்தை நோட்டீஸ் அல்லது   நமது அதிகார பூர்வமான http://www.pdmtntj.net/ இனைய தளத்திலோ வெளியிடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நபி வழியில் நமது கூட்டு குர்பானியும் அமைந்திட...
ஒட்டகம், மாடு இவற்றில் ஏழு நபர்கள் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி ஏழு குடும்பங்கள் சார்பாகக் குர்பானி கொடுக்கலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹஜ் மற்றும் உமராவில் ஓர் ஒட்டகத்தில் ஏழு பேர் வீ தம் கூட்டு சேர்ந்தோம். ( அறிவிப்பவர் : ஜாபிர்(ரலி) நூல் : முஸ்லிம் 2325)
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேர் வீ தமும் ஒரு ஒட்டகத்தில் 10 பேர் வீ தமும் நாங்கள் கூட்டுசேர்ந்தோம். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூற்கள் : திர்மிதி (1421), நஸயீ (4316), இப்னு மாஜா 3122)
ஒரு மாடு ஏழு நபருக்கும் ஒரு ஒட்டகம் ஏழு நபருக்கும் (கூட்டுசேர போதுமானதாகும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல் : அபூதாவூத் 2425)
மேல் கூறப்பட்டுள்ள ஹதீஸ்கள் மாடு அல்லது ஒட்டகத்தில் ஏழு பேர் கூட்டு சேரலாம் என்று தெரிவிக்கின்றது. ஒரு ஒட்டகத்தில் 10 பேர் கூட்டு சேருவதற்கும் ஆதாரம் உள்ளது. ஒட்டகம், மாட்டில் மட்டும் தான் பலர் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். ஆட்டில் ஒரு குடும்பம் மட்டுமே கொடுக்க வேண்டும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுமடம் கிளையின் சார்பாக கடந்த வருடங்களில் குர்பானி கடமையை நபி வழிப்படி கூட்டாக கொடுத்து வருகின்றோம்...அல்ஹம்துலில்லாஹ்...இதனை தொடர்ந்து இந்த வருடமும் நமது ஜமாஅத் சார்பாக கூட்டு குர்பானி கொடுக்க உள்ளோம் என்பதை தெரிவித்துகொள்கின்றோம்...

ஒரு மாட்டிற்க்கு 7 பேர் வீதம்.
ஒரு நபருக்கு ரூ1500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உடனே முன்பதிவு செய்து கொள்ளவும்...

இப்படிக்கு...
பகுரூதீன்...
(கிளை செயலாளர்)

தொடர்புக்கு : நலீம் : 9043727544, ஜலாலுதீன் : 9042880817, பகுரூதீன் : 9789246305.


(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம். எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன். அல்குரான்:(108:1,2,3)
(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! அல்குரான் : (22:37)

செய்திகள் : நன்றி புதுமடம் த.த.ஜ.காம்

மாநிலத்தில் தற்போது அதிகரித்து வரும் கற்பழிப்புகளுக்கு சீனிமாக்களும் டிவிக்களுமே காரணம், அதில் காட்டப்படும் ஆபாச காட்சிகளால் சிறுவயதிலயே இளைஞர்களும் இளைஞிகளும் பாலியல் ரீதியாக தூண்டப்படுகின்றது என ஹரியான மாநில மஹா பச்சாயத் குற்றம் சாட்டியுள்ளது.
டிவி மற்றும் சீனிமாவை கண்டித்ததுடன் திருமண வயது வரம்பை குறைக்க வேண்டும் எனவும் அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளது.
திருமண வயது வரம்பை குறைப்பதன் மூலம் இளம் வயதில் பாலியல் ரீதியாண உணர்வுகள் தூண்டப்படுபவர்கள் திருமணத்தின் மூலம் அதை பூர்த்தி செய்து கொள்வார்கள் இதனால் நாட்டில் கற்பழிப்புகள் குறையும் எனத் ஹரியான மாநில மஹா பச்சாயத் கூறியுள்ளது.
மேலும் இது குறித்து முடிவு எடுக்க Gohana என்ற கிராமத்தில் கூட்டத்தை கூட்ட இருப்பதாக மஹா பஞ்சாயத் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த கிராமத்தில் தான் சமீபத்தில் ஒரு பெண் நான்கு நபர்களால் கற்பழிக்கப்பட்டார்.

செய்திகள் : நன்றி tntj.net