அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புதுமடம் செய்தி மற்றும் தங்களின் ஆக்கங்களை இவ்விணையதளத்தில் வெளியிட இன்றே கீழ் காணும் மின்னஞசல் முகவரிக்கு தங்களின் மின்னஞசலை அனுப்பி வைக்கவும்.





mail@pdmnews.com
__________________
இது வரை நமது தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை

முகநுால்

டுவிட்டர்

Blogger இயக்குவது.
வியாழன், டிசம்பர் 13, 2012
பாரதியை பல்லக்கில் தூக்கும் கணேசனும், வைத்திமாமாவும்... காரணம்..?

மகா க(கா)வி பாரதி யார்?
வியாழன், டிசம்பர் 06, 2012
எனக்கு இந்தச் சர்க்காரைப் பற்றிக் கவலை இல்லை. வேறு எந்த சர்க்கார் வந்தாலும் கவலையில்லை. காந்தியார் சொல்வது போல் ராமராஜ்யம் வந்து ஒரு ஜதை செருப்பு (செருப்பின் பேரால்) 14 வருஷம் மாத்திரமல்ல, 50 வருஷம் ஆண்டாலும் கவலையில்லை. ஆனால், உங்களைப் போல் இழிவும் கொடுமையும் படுத்தப்பட்ட மக்கள் இந்த பித்தலாட்ட அரசியலில் தலையிட்டு நசுங்கிப் போகக் கூடாது என்றுதான் மறுபடியும் சொல்லுகிறேன்.

உங்கள் சமூக வாழ்வில் சமத்துவம் வேண்டுமானால் நீங்கள் இந்தக் கணமே இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் பறையர், சண்டாளர் ஆகித் தீண்டப்படாதவர்கள் என்று ஆனதற்கு இந்து மதம் தான் காரணம். இந்து மதம் என்றால் பறையன், சூத்திரன், பிராமணன் இருக்க வேண்டும் என்பது தான் கருத்து இந்த பிரிவுகளை நிலைநிறுத்துவதுதான் இந்த மதத்தின் கொள்கையும் வேலைத் திட்டமும் ஆகும்.

உங்களைப் பொருத்த வரையில் அம்மதத்தில் இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆகையால் இதை உடனே விட்டு விடுங்கள். உங்களுக்கு ஏதாவது ஒரு மதம் வேண்டும் என்று நீங்கள் கேட்டால் உங்களுக்கு இஸ்லாம் மதத்தைச் சிபாரிசு செய்கிறேன். பெளத்தர்களையும் பிற பெளத்தர்கள் என்றும் பெளத்த பறையர்கள் என்றும் மற்றவர்கள் சொல்லுகிறார்கள். பல பெளத்தர்கள் ஆதிதிராவிடர்களாகத் தான் இன்றும் கருதப்படுகிறார்க்ள்.

கிறிஸ்தவர்களிலும் பறை கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். பாதிரிகளே அப்படி கருதுகிறார்கள். கிறிஸ்தவர்களுக்கு ஆள் எண்ணிக்கை தான் கவலையே தான் தவிர, சுயமரியாதையில் கவலை கிடையாது.

கிறிஸ்தவத்தில் சேர்ந்த ஆதிதிராவிடர்களுக்கும் சுயமரியாதை வேண்டுமானால் அதை விட்டு இஸ்லாமியர்களாகுங்கள் என்று தான் சொல்லி வருகிறேன். மற்றபடி "மோட்சத்தில்", "பாவமன்னிப்பிலோ" எந்த மதம் எப்படி இருந்தாலும் மனிதத் தன்மையில் ஆதிதிராவிடர்களுக்கு இஸ்லாம் மதந்தான் பறைத் தன்மையை ஒழிக்கிறது. பறை துலுக்கன், பறை முகம்மதியர் கிடையாது. பார்ப்பன முஸ்லிம் கிடையாது. மனித முஸ்லிம் தான் உண்டு.

நீங்கள் அதில் விழுந்தாலொழிய 100 வருஷமானாலும் உங்கள் பறை தன்மை போகாது.

தோழர்களே! !இவை என் அபிப்ராயம். இவற்றைக் கேட்ட நீங்கள் உங்கள் புத்தி கொண்டு சிந்தித்து உங்களுக்கு சரியென்றபடி நடங்கள்.

(ஆம்பூரில் 4.7.1937 அன்று நடைப்பெற்ற ஆதிதிராவிடர்கள் மகாநாட்டில் தந்தை பெரியார் சொற்பொழிவு. - 'குடியரசு' இதழ் 16.7.1937)
செவ்வாய், டிசம்பர் 04, 2012
செக்ஸ் காட்சிகளை தயாரித்து பணம் பறிக்கும் கும்பல்

இ-மெயில் மூலம் நட்பு வலைவிரித்து இளம் பெண்களை வீழ்த்தி பணம் பறிக்கும் இ-பயங்கர வாதம் அதிகரித்து விட்டது. உலகளாவிய தொடர்புகளால் குற்றவாளிகளை பிடிப்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.

எளிய நகரங்களில் மட்டும் அல்லாது, சிறிய ஊர்களில் கூட இன்று இன்டர்நெட் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தவிர, வசதி படைத்தவர்கள் வீடுகளிலேயே இன்டர்நெட் இணைப்பை வைத்துள்ளனர். இன்டர்நெட் கலாச்சாரம் பெருகி விட்டது. இன்டர்நெட் நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டது போக, இன்று பல்வேறு குற்றங்களுக்கு ஊற்றுக் கண்ணாக மாறிப் போய் விட்டது.

சமூக விரோதிகள் விரிக்கும் வலையில் சிக்கி இளம் பெண்களும், குடும்ப பெண்ணும் வெளியில் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர். குடும்ப கவுரவம், சமூக அந்தஸ்து இவற்றை கருதி பிளாக் மெயில் பேர் வழிகள் கேட்கும் பணத்தை, பொருளை கொடுத்து, வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றனர். இதுவே பிளாக்மெயில் பேர் வழிகளுக்கு உரமிட்டது போல் ஆகி விடுகிறது. இப்படி பல விஷயங்ககள் அமுக்கப்படுவதால், இன்டர்நெட் குற்றவாளிகளை பிடிப்பது சைபர்கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த 10 வயது பள்ளிச்சிறுமி இன்டர்நெட் மூலம் கிடைத்த நட்பு வலையில் சிக்கி, பல்வேறு அவஸ்தைகளை அனுபவித்த சம்பவம் இப்போது வெளியாகி உள்ளது. சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகள் அபி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 10 வயதான இவள் நகரில் உள்ள பிரபல பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கிறாள். இந்த வயதிலேயே இன்டர் நெட்டில் இவள் புகுந்து விளையாடுவதை பார்த்து இவளது பெற்றோர் பூரித்துப் போனார்கள்.

இவளது இ.மெயில் முகவரிக்கு தினமும் நிறைய மெசேஜ்கள் வந்தன. அந்த முகவரிக்கு இவளும் பதில் அனுப்புவாள். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இவளது இ-மெயிலுக்கு உனது நட்பு தேவை என்று மெசேஜ் வந்தது. அதனுடன் அதை அனுப்பி இருந்தவர், தானும் ஒரு பள்ளி மாணவி என்றும், ஒரு சமயத்தில் அபியுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவள் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து, அந்த முகம் தெரியாத பெண்ணை அபி நண்பராக ஏற்றுக் கொண்டாள். இருவரும் அடிக்கடி ஆன்-லைனில் பேசிக் கொண்டனர். இப்படியே தொடர்ந்து பழக்கம் சில நாளில் திசை மாறியது. நைசாக பேசி அபியை சில நடவடிக்கைகளுக்கு அவர் உட்படுத்தினாள்.

வெப்-கேமரா முன்பு தனது அங்கங்களை காட்டினாள். இதை விளையாட்டாகவே அபி நினைத்தாள். ஆனால், இவளது செய்கைகள் அனைத்தும் வெப்- காமிராவில் படம் பிடிக்கப்பட்டு, எதிர் முனையில் பதிவு செய்யப்பட்டது. இந்த விஷயத்தை அபி தன் பெற்றோரிடம் சொல்லவும் இல்லை, மகளின் நடவடிக்கைகளை அவர்கள் கண்காணிக்கவும் கிடையாது. இப்படியே 3 மாதங்கள் கடந்த நிலையில், அபியின் தந்தைக்கு மிரட்டல் இ- மெயில் வந்தது. அதில் ரூ.50 லட்சம் தரவேண்டும். இல்லை எனில் அபியின் ஆபாச வீடியோவை யூடியூப்பில் போட்டு விடுவேன். போலீசுக்கு போனால் நிலைமை இன்னும் விபரீதம் ஆகும்.

மற்ற இணையத்தளங்களிலும் ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என்றும் மிரட்டப்பட்டார். இதனால் போலீசுக்கு செல்ல தயங்கினார். பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல் இ-மெயில்கள் வந்த வண்ணம் இருந்தன. அபியின் பெற்றோர், தனியார் துப்பறியும் ஏஜென்சியை அணுகி விபரத்தை தெரிவித்தனர். அவர்கள் சைபர் குற்றங்களை கண்டு பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

இது பற்றி, தனியார் துப்பறியும் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இது போன்று நிறைய புகார்கள் எங்களிடம் வந்துள்ளன. பேஸ்புக்கில் முதியவர்கள் கூட இளையவர் போன்று தோற்றமளிக்கும் வகையில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இளம் பெண்களை ஏமாற்றுகின்றனர். நட்பு விலையில் விழச்செய்து பெண்களை பிளாக் மெயில் செய்வது, பணம் பறிப்பது போன்ற செயல்களில் இ-பயங்கர வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நெதர்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சைபர் குற்றங்களை நவீன தொழில் நுட்பம் மூலம் சுலபமாக கண்டுபிடித்து விடுகின்றனர். ஆனால், இந்தியாவில் போலீசாருக்கு போதிய பயிற்சியும், நுட்பமும் இல்லாததால், சைபர் குற்றங்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது.

இணைய தளத்தில் சாட்டிங்கில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக பெண்கள் முன் ஜாக்கிரதையாக கையாண்டால், இது போன்ற சிக்கல்களை தவிர்க்க முடியும். வெளிநாடுகள் அல்லது தூரத்தில் இருக்கும் தெரிந்து நட்பு மற்றும் உறவு வட்டாரங்களில் மட்டுமே இ-மெயிலில் பேச வேண்டும். முகம் தெரியாதவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வது, பின்பு பல சிக்கல்களுக்கு வழி ஏற்படுத்தி விடும்.

முகம் தெரியாதவர்களின் முகவரிக்கு எந்த சூழ்நிலையிலும் போட்டோவை அனுப்ப கூடாது. போட்டோவை வைத்து கூட மார்பிங்” முறையில் ஆபாசமாக சித்தரிக்க முடியும் எச்சரிக்கை மிகவும் அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.
ஞாயிறு, டிசம்பர் 02, 2012
மொபைல் ஃபோன் இணைப்பு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அந்த இணைப்பை துண்டித்து விடுவதை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழக்கமாக கொண்டுள்ளன.
ராமேஸ்வரம் நகராட்சி, ராமநாதபுரம் டி.எஸ்.பி. அலுவலக துப்புரவு பணியாளர் காலி பணியிடம் வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை
சனி, டிசம்பர் 01, 2012
ஐநா சபையில் non-member observer state, அதாவது 'உறுப்புரிமை அற்ற பார்வையாளர்' என்ற அந்தஸ்து கிடைத்துள்ளதை பாலஸ்தீனியர்கள் கொண்டாடுகிறார்கள்.