அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புதுமடம் செய்தி மற்றும் தங்களின் ஆக்கங்களை இவ்விணையதளத்தில் வெளியிட இன்றே கீழ் காணும் மின்னஞசல் முகவரிக்கு தங்களின் மின்னஞசலை அனுப்பி வைக்கவும்.





mail@pdmnews.com
__________________
இது வரை நமது தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை

முகநுால்

டுவிட்டர்

Blogger இயக்குவது.
புதன், பிப்ரவரி 20, 2013

தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் அறிவிப்பு...

2013 ஹஜ் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 20 2013.



ஹஜ் பற்றிய மேலும் விபரங்களுக்கு : hajcommittee.com

ஹஜ் செய்முறை விளக்கங்கள் பற்றி அறிய : Onlinepj.com & Tntj.net


Source by : facebook.com/ThouheedJamath


சனி, பிப்ரவரி 16, 2013

கோகோகோலாவை அளவிற்கு அதிகமாக குடித்து உயிரை பறிகொடுத்துள்ளார் நியூசிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்.
நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள இவ்னர்கார்கில் பகுதி‌யை சேர்ந்தவர் நடாஷா ஹாரிஸ் (30).
இவர் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் கோக கோலா குடித்து வந்துள்ளார்.
இதனால் அவருக்கு முதலில் இருதய நோய் தாக்கியது.
இதன்பின்னர் மரணத்தை தழுவியுள்ளார் நடாஷா. அந்தப் பெண்ணின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. அதில் உடலில் அளவுக்கதிகமாக கோக கோலா இருந்ததால் அவரது வளர்சிதை மாற்றத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவரது இதயம் பலவீனமாகி இறுதியில் அவரது மரணத்திற்கு காரணமாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோக கோலா, பெப்ஸி உள்ளிட்ட குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் உள்ளது என பல்வேறு ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன. இருந்தாலும் கோகோ கோலா, பெப்ஸி போன்ற குளிர்பானங்கள் குடிப்பதைத்தான் இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புகின்றனர்.
ஆனால் இந்த கோகோ கோலாவை தொடர்ந்து பருகினால் நடாஷா ஹாரிஸ் க்கு ஏற்பட்ட கதி தான் நமக்கும் ஏற்படும் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர்…


புதன், பிப்ரவரி 06, 2013


தினமும் பல செய்திகளை நாம் தெரிந்து கொள்கிறோம்கற்றுக் கொள்கிறோம். அவற்றில் அவசியமான  தகவல்களை  நினைவில்  வைத்துக்கொள்ள  நினைப்போம். ஆனால்  மறந்துவிடும்காரணம்கற்கும்  பழக்கத்தைக்  கடைபிடிக்கும்  நாம்கற்றதை நினைவில்  வைத்திருக்கும்  வழிமுறைகளை  தெரியாமலும், சரிவர  கடைபிடிக்காமலும் இருப்பதுதான்ஆதாலால்  கற்பதை  நினைவில்  வைத்துக்  கொள்ள  சில  தகல்களை தெரிந்து  கொள்வோம்...  வாருங்கள்...

மனிதனின் நினைவாற்றல்!

ஒரு மனிதன்அரைமணி நேரத்தில் தான் பெற்ற விவரங்களில் 40 சதவீதத்தை மறந்துவிடுகிறான்  என்பது  ஆய்வுகள்  மூலம்  நிரூபணமாகியிருக்கிறதுமறுநாள்அவன்  34 சதவீதத்தையே  நினைவில்  கொள்கிறான்மூன்று  நாட்களுக்குப்  பின்னர் அவனால்  25 சதவீதத்தை  நினைவில்  தக்கவைக்க  முடிகிறதுஆரம்ப  நாட்களுக்குப்பின்  நினைவு தீவிரமாக  வீழ்ச்சியடைந்தகிடைமட்டமாக ஓடுகிறது.

மீண்டும் மீண்டும் கூறுதல் அல்லது படித்தலே நினைவில் நிறுத்தலின் அடிப்படை. ஒரு விஷயத்தைக் கற்றபிறகு பின்னர் அதை 15 -20நிமிடங்களுக்குப் பின்பும், 8 - 9மணி நேரத்திலும், 24மணிக்குப் பின்பும் நினைவுபடுத்திப் பார்ப்பது அவசியம். படுக்கைக்குச் செல்வதற்கு 15 -20நிமிடங்களுக்கு முன்னரும், காலை படுக்கையை விட்டு எழுந்தவுடனும் ஒரு முறை நினைவுபடுத்திப் பார்ப்பது பயனளிக்கும்.

முறையான ஓய்வும் முக முக்கியமானதாகும். 30நிமிடங்கள் முழுமையாக வேலையின்றி இருப்பவர்கள் தாம் காண்பவற்றில் 50 - 55சதவீதத்தை நினைவுபடுத்திக் கூறிவிட முடியும். ஆனால் அந்த நேரத்தில் வேறு ஏதேனும் ஒரு வேலையில் ஈடுபட்டிருப்பவர்கள் 25சதவீதத்தையே மீண்டம் கூற முடியும் என்பதையும் ஆராய்ச்சி காட்டுகிறது.

உங்களது நினைவாற்றலைக் கூர்மையாகவும், தீவிரமாகவும் வைத்திருங்கள். வெறுமனே திருப்பித் திருப்பி ஒன்றைப் படிப்பதை விட அந்த வாசகத்தை நாமே புரிந்து, பின்னர் அதை நமது சொந்த வார்த்தைகளில் வெளியிடுவது பயன் தரும். எதையேனும் ஒன்றைப் படித்தபிறகு மனதில் அதை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களால் அதை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை என்றால் உடனே புத்தகத்தைத் திருப்பாதீர்கள். நினைவுக்குக் கொண்டுவர தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். சற்றுக் கஷ்டப்பட்டும் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை என்றால் புத்தகத்தைத் திருப்பிப் பார்ப்பது நல்லது. நினைவாற்றலைப் பயிற்சியின் மூலம் வளப்படுத்த முடியும்....

நினைவாற்றல் 20 -  25வயது வரை வளர்ச்சியடைகிறது. 40 -45வயது வரை அது நிலையாக நீடிக்கிறது. அதற்குப் பின் பலவீனமடைகிறது. பிம்ப அடிப்படையிலான நினைவில் 75சதவீதம் நமது 25வயதுக்கு முன்னரே பெறப்பட்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் தர்க்க ரீதியான நினைவாற்றலுக்கு வயது வரம்பு ஏதும் கிடையாது.

நன்றி : (தினதந்தி இலவச இணைப்பு 4-2- 2012 / பக்கம் : 10)

அலகாபாத் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில்(ஐஐஐடி)யில் எம்எஸ்.சைபர் லா மற்றும் தகவல் பாதுகாப்பு படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


  • வழங்கப்படும் படிப்புகள்: எம்.எஸ்., சைப லா அன்ட் இன்பர்மேஷன் செக்யூரிட்டி(MS - Cyber Law & Information Security) - 2013
  • கல்வி கால அளவு : 2 வருடம்.
  • கல்வித்தகுதி: இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பி.இ., பி.டெக்.,யில் சட்டப் படிப்பும், முதுகலை பட்டப் படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்படும். விண்ணப்பங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பொதுப்பிரிவினர் ரூ.1200ம், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600 வரைவோலை எடுக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் மெரிட் முறையிலும், நுழைவுத் தேர்வில் 65 சதவீத மதிப்பெண்களும், நேர்முகத்தேர்வில் 35 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
  • மே 11, 12ம் தேதிகளில் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. 


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

Indian Institute of Information Technology, Allahabad Deoghat Jhalwa, Allahabad – 211012 (U.P.) India Exam Queries: +91-532-2922187 Phone: +91-532-2922032/33, Fax: +91-532-2430006, 2431689, 2922081 Emailcontact@iiita.ac.in Websitewww.iiita.ac.in

மேலும் விரிவான தகவல்களுக்கு கீழ் கண்ட இணையதளத்தை பார்க்கவும் :http://ms.iiita.ac.in/index.php?option=com_content&view=article&id=47&Itemid=62
       

கோடம்பாக்கம் - ரஃபீக்
Source : www.tntjsw.net



வெள்ளி, பிப்ரவரி 01, 2013

மத்திய அரசு பணிகளில் தகுதியானவர்களை பணி அமர்த்த UPSC போல் Staff Selection Commission என்ற ஒரு அமைப்பை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது, ஆண்டு தோரும் இந்த அமைப்பு தேர்வுகள் நடத்தி மத்திய அரசு பணிகளில் பணியார்களை நியமிக்கின்றது. பொதுவாக இதில் வரும் பணி இடங்கள் நடுத்தர மற்றும் கீழ் மட்ட பணி இடங்களாகும் (Group C மற்றும் Group B), எனவே இதில் சேர்வதர்க்கான தகுதியும் குறைவாக இருக்கும், தேர்வும் கடினம் இல்லாமல் இருக்க்ம், அரசு பணியில் சேர ஆர்வம் உள்ள மாணவர்கள் இதில் பங்கு பெற்று பயனடையலாம்.
2013 – ஆண்டுக்கான தேர்வு அட்டவணை
(மேற்கண்ட அட்டவனையில் மொத்தம் 17 வேலை வாய்ப்பிற்கான தேதிகள் உள்ளன, அதில் முதல் 4 வேலை வாய்ப்புகள் தேதி முடிந்துவிட்டது என்பதை கவனத்தில் கொள்க)
மேலும் விபரங்கள், தேர்வு எழுதுவதற்க்கான தகுதிகள், விண்ணபிக்கும் முறை ஆகியவற்றை அறிய கீழ்காணும் இணையதளங்களை பார்வையிடுங்கள்
http://www.ssc-cr.org/
http://ssconline.nic.in/index.php
S.சித்தீக்.M.Tech